“நோன்புக்கு மத்தியில் 2 விக்கெட்களை வீழ்த்திய இம்ரான் பாய்”- ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட சென்னை!
ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலே இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கடந்த 25-ம் தேதி சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டிக்கு கடும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, இறுதிவரை போராடி 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம் சென்னை அணி, 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பந்துவீச்சில் சென்னை அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
இம்ரான் தாஹிர், ரம்ஜான் பண்டிக்கைக்காக நோன்பை கடைபிடித்து வருகிறார். இதனால் அவர் காலை முதல் மாலை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலே இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளது.
No words to express our #Yellove for you Imran Bhai!
Fasting and on duty with so much dedication. Respect ????????#CSKvRCB #WhistlePodu #Yellove ????????— Chennai Super Kings – Mask P????du Whistle P????du! (@ChennaiIPL) April 25, 2021
அந்த பதிவில், “நோன்பு இருந்ததற்கு மத்தியில் அணிக்காக அர்பணிப்புடன் விளையாடியது பற்றி கூற வார்த்தைகளே இல்லை இம்ரான் பாய்” என்று பதிவிட்டுள்ளது. தாஹிரின் இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.