CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
ஆக்ரோஷமாக விளையாடிய அவர் 3 சிக்ஸர், 6 ஃபோர்களுடன் வெறும் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த போது ரஷீத் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மிகச்சிறப்பாக விளையாடிய அவர் இப்படி திடீரென ஆட்டம் இழந்ததால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேயும் பொறுப்புடன் விளையாடாமல் ஆட்டமிழந்தார். அதன் பின் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் பொறுப்புடன் விளையாட தொடங்கினார்.
மேலும், அவர் ஸ்கோரை உயர்த்த விளையாடிய சிறுது நேரத்திலே 46 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய சிஎஸ்கே அணியின் சிக்சர் ‘டுபே’ குஜராத் அணி பந்து வீச்சை நான்கு பக்கமும் போலந்து கட்டினார். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவரது ஆட்டமானது சிக்சர் மழையாகவும், வானவேடிக்கையாகவும் அமைந்தது என்றே கூறலாம். கடந்த ஐபிஎல் தொடரில் எங்கு விட்ட்டாரோ சிவம் டுபே அதிலுருந்து தொடங்கியது போல தனது ஆட்டத்தை பதிவு செய்தார்.
மிகச்சிறப்பாக விளையாடிய அவர் 2 ஃபோர்கள், 5 சிக்சர்களுடன் வெறும் 22 பந்துகளில் தனது அரை சத்தத்தை கடந்தார். அதனை தொடர்ந்து ரஷீத் கான் பந்து வீச்சில் 19 ஓவரின் முதல் பந்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சமீர் ரிஷ்வியும், மிட்ச்செல்லும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே அணியில் புதியதாக களமிறங்கிய சமீர் ரிஷ்வி வந்தவுடன் ரஷீத் கான் பந்தை 2 சிக்சர்கள் மூலம் தூக்கிகடாசினார்.
இறுதி ஓவரின் 2-வது பந்தில் ரிஸ்வியும் 14 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார் . இறுதியில், 20 ஓவருக்கு6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து. இதனால், 207 என்ற இமாலய இலக்கை எட்ட குஜராத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…