டும்..டும்..டும்…கிரிக்கெட் வீராங்கனை உத்கர்ஷாவை மணந்தார் CSK வீரர் ருதுராஜ்.!

Ruturaj Gaikwad Wedding

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நேற்று உத்ராக்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.

CSK தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அவருடைய நீண்டநாள் காதலியான உத்ராக்ஷாவினை நேற்று மாலை திருமணம் செய்து கொண்டார். அதனை உறுதி செய்யும் வகையில், தனது திருமண நிகழ்வின் கியூட் புகைப்படங்களை ருதுராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ruturaj Gaikwad (@ruutu.131)

ருதுராஜ் மணந்துகொண்டு உத்ராக்ஷாவும் மகாராஷ்டிரா மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர். இதற்கிடையில், ருத்துராஜ் உலகக் கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்வாகியிருந்தாலும் திருமணம் காரணமாக  நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ruturaj Gaikwad WEDDING
Ruturaj Gaikwad WEDDING [Image Source : instagram/Ruturaj Gaikwad]

நீண்ட நாள் டேட்டிங்:

ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட நாட்களாக உத்கர்ஷாவுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் நேற்று அவரை திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி, உத்கர்ஷா ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க வந்து, ருத்துராஜ் கெய்க்வாட்டை உற்சாகப்படுத்துவது வழக்கம். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியிலும், உத்கர்ஷா போட்டியைக் காண வந்திருந்தார். ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் CSK அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின், ருதுராஜ் உடன் கோப்பையை வைத்திருக்கும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

CSK Opener Ruturaj Gaikwad Wedding
CSK Opener Ruturaj Gaikwad WeddingRuturaj Gaikwad WEDDING [Image Source : instagram/Ruturaj Gaikwad]
கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து:

கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இந்த ஜோடிக்கு திருமண புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொன்டு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். ஷிகர் தவான், மகிஷ் தீக்ஷனா, தேவ்தத் படிக்கல், விஜய் சங்கர், ரஜத் படிதார், ரவி பிஷ்னோய், ராகுல் சாஹர், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ரஷித் கான், கலீல் அகமது, ராகுல் தெவாடியா, தீபக் சாஹர் உள்ளிட்ட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்னர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்