சிஎஸ்கே அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஏலத்தில் கோடிக்கணக்கில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தேசிய அணியில் விளையாடுவதற்காக சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் ப்ளே ஆஃப்பில் சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இந்த சீசனில் அவர் சென்னை அணிக்காக 2 மேட்ச்சுகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் வரை நாங்கள் உங்களுக்காக விசில் அடிப்போம் என்று சிஎஸ்கே நிர்வாகம் ட்வீட் செய்தது. பென் ஸ்டோக்ஸ் தற்போது விலகியுள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஸ்டோக்ஸ் இந்த சீசனின் 2 போட்டிகளில் விளையாடி 15 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இவரை தங்கள் அணியில் வாங்கிட வேண்டும் என அனைவரும் போட்டி போட்டு இறுதியில் சிஎஸ்கே அணி ரூ. 16.25 கோடிக்க வாங்கியது. காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் அணியில் இடம்பெற்ற போதிலும் அவர் போட்டிகளில் விளையாடவில்லை.
இருப்பினும், அவர் இல்லாமலையே சென்னை அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் குவாலிஃபையர் நுழைந்துள்ளது. ஆனால், இந்த முக்கியமான தருணத்தில் பென் ஸ்டோக்ஸ், சி.எஸ்.கே அணியை விட்டு செல்வது சி.எஸ்.கே.ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியயும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…