முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 49 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – நிதீஷ் ராணா களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி அதிரடியாக ஆடிவந்த நிலையில், 26 ரன்களில் சுப்மன கில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து நரேன் களமிறங்க, 7 ரன்கள் மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிவந்த நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார்.
அதன்பின் 11 ரன்களில் ரின்கு சிங் வெளியேற, அரைசதம் விளாசிய 87 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் என்ஜிடி 2 விக்கெட்ளையும், சாண்ட்னர், கரண் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…