இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.
முதல் 5 ஓவர்கள் வரை இந்த கூட்டணி பொறுமையாக ஆடிவந்த நிலையில், 18 ரன்கள் அடித்து மயங்க் அகர்வாக் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ராஜபக்க்ஷே களமிறங்க, தவானுடன் இணைத்து அதிரடியாக ஆடிவந்தார். இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது. 42 ரன்கள் அடித்து ராஜபக்க்ஷே வெளியேறினார். அவரைதொடர்ந்து ஜானி லிவிங்ஸ்டன் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 17 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் என மொத்தம் 88 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…