ஐபிஎல் தொடரில்தற்பொழுது நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டூ பிளேஸிஸ் களமிறங்கினார்கள். இவர்களின் தொடக்கம் அதிரடியாக இருந்தது.
இதில் 38 ரன்கள் அடித்து டூ பிளேஸிஸ் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். 30 ரன்கள் எடுத்து விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய பட்டிதார், சிறப்பாக ஆடி 21 ரன்கள் எடுத்தார். பின்னர் 18-ம் ஓவரை வீசிய தீக்ஷனா, லொம்ரோர், ஹசரங்கா, ஷாபாஸ் அஹமது ஆகிய மூவரின் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…