மும்பை மற்றும் சென்னை இடையேயான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதல் ஆட்டத்தில் முதல் 18 ஓவர்கள் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சென்னை அணி. ஆனால் கடைசி 2 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன் விளாசிய.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் துவக்கம் முதலே சரியாக ஆட முடியவில்லை. சென்னை அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்களிலும் தோனி 12 ரன்களிலும் வெளியேறினர்.
கேதர் ஜாதவ் மட்டும் நிலைத்து நின்று 54 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆனால் மும்பையின் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் . பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் இரண்டிலும் ஒற்றை ஆளாக சென்னை அணியை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…