ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – கான்வே களமிறங்கினார்கள்.
அதிரடியாக ஆடிய ருதுராஜ் 28 ரன்கள் அடித்து வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய ராபின் உத்தப்பா 1 ரன் மட்டுமே அடித்து வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய அம்பதி ராயுடு 10 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கான்வே, 56 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜா 3 ரன்கள் அடித்து வெளியேற, சிறப்பாக ஆடிவந்த மொயின் அலி 34 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டையும் இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய தோனி, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி, தனது பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது. மேலும் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியது.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…