ஏலத்தில் கலக்கிய சிஸ்கே..! மஞ்சள் படையில் இன்னும் யாரை எல்லாம் எடுக்கலாம்?
சிஎஸ்கே அணி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் முக்கிய வீரராகள் ஒரு சிலர் தவறவிட்டால் இன்று யாரையெல்லாம் எடுக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது தற்போது சவுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கான முதல் நாள் நேற்று நிறைவடைந்த நிலையில், 2-ஆம் நாள் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது.
நேற்று நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில், நூர் அகமது, ரவி அஸ்வின், டேவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று 7 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த முறை சென்னை அணி ஏலத்தில் நல்ல வீரர்களை எடுத்துள்ளது என ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியிலிருந்தாலும், மறுபக்கம் ஒரு சில ரசிகர்கள் ஸ்டார்க், போல்ட் போன்ற வீரர்களை எடுக்காததால் ஏமாத்திரத்திலும் இருந்து வருகின்றனர்.
இருப்பினும் சென்னை அணியின் இந்த வீரர்கள் பட்டியல் திருப்தி அளிக்கிறது என ரசிகர்கள் கூறிவருகின்றனர், இந்த நிலையில், இன்று நடக்கப்போகும் 2-ம் நாள் ஏலத்தில் சென்னை அணி எந்த வீரர்களை எல்லாம் எடுக்கலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
சென்னை அணியில் மொத்தம் 12 வீரர்கள் உள்ளனர், இதனால் மேலும், 6 முதல் 13 வீரர்களை வரை ஏலத்தில் எடுக்கலாம். சென்னை அணியின் பேட்டிங் ஓரளவுக்கு நம்மைத் திருப்திப்படுத்தினாலும், பவுலிங்கை பார்க்கையில் இன்னும் வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, மதிஷா பத்திரனா, கலீல் அகமது என 2 வேகப் பந்து வீச்சாளர் மட்டுமே அணியில் தற்போது இருக்கின்றனர். ஐபிஎல் தொடரானது இந்திய மைதானம் என்பதால் ஸ்பின்னர்ஸ் போதுமாக இருந்தாலும் வேகம் தேவைப்படுகிறது.
இதனால், இன்றைய ஏலத்தில் புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்தில் வருவார்கள். எனவே, சென்னை அணி இன்று முழுக்க முழுக்க வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஏலத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பார்க்கப்படுகிறது. அதே போல அதிக இளம் வீரர்களையும் சென்னை அணி தக்க வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.