ஜடேஜாவுக்கு மரியாதை செய்ய காத்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!! அப்படி என்ன செஞ்சுட்டாரு ?

Jadeja Respect [file image]

IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது, ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கபட்ட  இந்த ஐபிஎல்  தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி தனது புதிய கேப்டனான ருதுராஜுடன் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் 2-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. சிஎஸ்கே போட்டி என்றாலே அதற்கு ஒரு தனி எதிர்ப்பார்ப்பு இருக்கும் அதுவும் இன்று குஜராத் அணியுடன் போட்டி என்பதால் எதிர்ப்பார்ப்பு கூடி கொண்டே இருக்கிறது.

இந்த இரு அணிகள் கடந்த ஆண்டின் ஐபிஎல்தொடரின் இறுதி போட்டியில் விளையாடினார்கள். அந்த போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது. அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா தான். அந்த இறுதி போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 பந்துகளையும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மூலம் வெற்றியை தேடி தந்தார்.

இதை சிறப்பிக்கும் விதமாக, இன்று 7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள்  ஐபிஎல் 2023 வெற்றிக்கு ஜடேஜா செய்த பங்களிப்புகளுக்காக,  அவரை உற்சாகப்படுத்தவும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் போட்டியின் எட்டாவது நிமிடத்தில் அனைவரும் எழுந்து நிர்ப்பர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில் 8-வது நிமிடம் என்பது ஜடேஜாவின் ஜெர்சி நம்பர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்