ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.
அதன் பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சரிவர விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தோனி களத்துக்குள் நுழைந்தார். இதை மைதானத்தில் இருந்த சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். அவரை ரசிகர்கள் கூச்சலிட்டு வரவேற்ற போது மைத்தனத்தில் 128 டெசிபல் (Decibal) அளவிற்கு சத்தம் பதிவானது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பதிவான அதிக டெசிபல் அளவு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தல தோனியும் அவரால் முடிந்த வரை வாய்ப்பாய் அமைந்த பந்துகள் அனைத்தையும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க விட்டார். ஆனாலும், சிஎஸ்கே அணியால் இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தது. மேலும், சென்னை அணியின் இந்த தோல்வியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ‘தல தரிசனம்’ தான் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சிஎஸ்கே ரசிகர்கள், சென்னை அணியின் போட்டிக்கு வருவதற்க்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று தான் ‘தல தோனியின் தரிசனம்’. அவர் எப்போது களத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்ப்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு இன்று அவரது வாணவேடிக்கையை காட்டினார் என்றே கூறலாம். மேலும், 2005 இல் ஆக்ரோஷமாக விளையாடிய தோனி தற்போது 2024-ல் திரும்பி வந்துவிட்டார் (Vintage Dhoni) என்று ரசிகர்கள் X களத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த போட்டியில் அவர் சற்று முன்பே களம் கண்டிருந்தால் சென்னை அணி நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். டெல்லி அணிக்கு எதிராக அதிரடி காட்டிய தல தோனி வெறும் 16 பந்துகளில் 37* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…