சிஎஸ்கே தோல்வியா.? குழப்பத்தில் ரசிகர்கள்.! திரையில் தோன்றியது என்ன.?

RUNNER UP csk

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள பிரதமர் மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இன்று இந்த இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

நேற்றே இந்த இறுதிப்போட்டி நடைபெறவிருந்த நிலையில், தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, போட்டி இரவு 9.35 மணிக்கு தொடங்கும் பட்சத்தில் ஓவர்கள் இழப்பில்லாமலும், போட்டி 11:56 மணிக்கு தொடங்கினால் இரு அணிகளும் 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்திலும் விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. இதற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால்  மழை விடாமல் பெய்த காரணமாக ஆட்டம் நாளை அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளும் இன்று மோதுகிறது.

இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 ரன்னர்-அப் என  காட்டப்படுவதைக் போல இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்த்து ஒரு ரசிகர், “இது உண்மையா அல்லது எடிட்-ஆ ? எனவும், மற்றொருவர், “இது ஸ்கிரீன் டெஸ்டிங்காக இருக்க வேண்டும்.” எனவும். சென்னை அணிக்கு இப்படி செய்தது போலவே, குஜராத் அணிக்கும் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே, இன்று மழை பெய்தால் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி வெற்றிபெற்றுவிடும் என கூறப்பட்டு வரும் நிலையில், திடீரென மைதானத்தில் உள்ள பெரிய திரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 ரன்னர்-அப் என வருவதாக கூறும் புகைப்படம் சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்