CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்வதற்கு சென்னை அணி களமிறங்க உள்ளது.
இந்த போட்டி MA சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானம் என்பதால் பவுலர்களுக்கு ஏதுவான, குறிப்பாக ஸ்பின் பவுலர்களுக்கு எப்போதுமே ஏதுவான பிட்சாக அமையக்கூடும். ஆனால், தற்போது பேட்டிங் பிட்ச்சாக அமைத்துள்ளது என்பதால் இந்த முடிவை குஜராத் அணி எடுத்துருக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும், இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்று வருவதால் இந்த போட்டியில் எந்த அணி இரண்டாவது வெற்றியை பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை அணி ஒரு முறை கூட குஜராத் அணியை லீக் போட்டியில் வென்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணி வீரர்கள் :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ் பாண்டே.
குஜராத் அணி வீரர்கள் :
சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் டெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…