சென்னை அணி சாம்பியன்களைப் போல வலுவாகவும், சிறப்பாகவும் திரும்பி வரும் என பிராவோ நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.
தொடர் தோல்வி காரணமாக சென்னை அணியையும், கேப்டன் தோனியையும் விமர்சிக்க தொடங்கினார்கள். டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி, தாயகம் திரும்பவுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிராவோ வெளியிட்டுள்ள ஒரு விடியோவை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பிராவோ, சென்னை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களின் ஆதரவை அளித்து வாருங்கள் என கூறிய பிராவோ, தங்களால் முடிந்தளவு சிறப்பாக ஆடினோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்குமாரும், நாங்கள் சாம்பியன்களைப் போல வலுவாகவும், சிறப்பாகவும் வருவோம் என்று நம்பிக்கையுடன் கூறிய பிராவோ, நாங்கள் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறோம், சென்னை அணியின் மெம்பராகவும், ரசிகர்களாகவும் இருக்கு நாம் பெருமைப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…