நான் சதம் அடிக்க நினைக்கவில்லை… ஆனா இதனால் சோகம்.. ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj Gaikwad

IPL 2024: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடிக்க  வேண்டும் என்று நினைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னை அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்களை அடித்தது. சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்திருந்தார். சதம் அடிக்க 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் ருதுராஜ் கெய்க்வாட்கூறியதாவது, இந்த வெற்றியின் மூலம் நான் நன்றாக உணர்கிறேன். ஈரப்பதமான பிட்சில் விளையாடுவது எப்போதுமே கடினமானது. இதுபோன்ற சூழலில் 70க்கும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது சிறப்பான ஒன்று.

டாஸை தோற்றத்திலும் ஒரு நல்லது இருக்கு. எனது விரலில் சொல்லுபடி எந்த காயமும் இல்லை. கடைசி போட்டியில் 20 ஓவர் பேட்டிங் செய்துவிட்டு 20 ஓவர் பீல்டிங் செய்தேன். இன்றும் கிட்டத்தட்ட அப்படி தான் இருந்தது. இதனால் தான் கொஞ்சம் சோர்வு, மற்றபடி எந்த காயமும் இல்லை.

220க்கும் மேல் ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைத்தேன் தவிர, சதம் அடிக்க வேண்டும் என்றும் சதம் அடிக்க முடியவில்லை எனவும் நான் நினைக்கவும் இல்லை, கவலையும்படவில்லை. ஆனால், இறுதியில் என்னால் அதிக ரன்களை வேகமாக அடிக்க முடிவியவில்லை என்று சோகமாக இருந்தது.

இருப்பினும் இந்த இலக்கு போதுமானதாக இருந்தது.  கடந்த போட்டியில் பந்துவீச்சில் சில தவறுகளை செய்தோம். தற்போது சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பீல்டிங்கிலும் சிறப்பாக இருந்தோம். இம்பேக்ட் பிளேயர் விதியால் எப்போதும் கூடுதலாக 20 ரன்கள் தேவைப்படுகிறது.

இதனால் வெற்றிக்கான இலக்கு என்ன என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்துவீசினார். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஈரப்பதம் அதிகமிருந்த பிட்சில் ஜடேஜாவின் பவுலிங்கும் சிறப்பாக இருந்தது.

இதுதான் இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது என தெரிவித்தார். மேலும், டிரஸ்ஸிங் ரூமில் சீனியர் வீரர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது, நான் சொல்லவும் மாட்டேன். பின் இருக்கையில் அமர்ந்து அவர்களை அனுமதிக்க வேண்டும், அவர்கள் பணிகளை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital