Ruturaj Gaikwad speech after the win against Kolkata [image source: BCCI/Sportzpics]
ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது.
இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்லொவ் பிட்ச் என்பதால் இந்த ரன்கள் அடிப்பதே சற்று கடினமாக இருக்கும் என கூறப்பட்டது.
இருப்பினும், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி நிதானமாக விளையாடி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 14 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை (67* ரன்கள்) பதிவு செய்தார்.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு பிறகு கேப்டன் ருதுராஜ் கூறியதாவது, இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான். ஏனென்றால், இந்த சீசனில் எனது முதல் அரைசதத்தை நினைவில் கொள்ளமுடியும், மஹி பாய் (எம்எஸ் தோனி) என்னுடன் களத்தில் இருந்தார்.
அதேசமயம் கேப்டனாக முதல் அரைசதம் அடித்த போதும் நானும் அவரும் இணைந்து போட்டியை முடித்துள்ளோம். ரஹானே லேசாக காயம் அடைந்ததால், கடைசி வரை களத்தில் இருக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. இந்த பிட்ச் 150 முதல் 160 ரன்கள் அடிக்க கூடியது. அதைத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
சிக்ஸ் அடிக்கும் ஆடுகளம் அல்ல, ஜடேஜாவை பவர்பிளேக்குப் பிறகுதான் எப்போதும் பவுலிங் செய்ய கொண்டு வருவோம். இந்த அணியில் நான் யாரிடமும் எதையும் சொல்ல வேண்டியதில்லை. அனைவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எங்களிடம் தோனி, ஃப்ளெமிங் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
நான் ஸ்லோவாக தொடங்கினேன் என்று கூறமாட்டேன். டி20 கிரிக்கெட்டில் சில போட்டிகளில் ஆட்டம் மாறிவிடும். சில நேரங்களில் சிறிது உங்களுக்கு தேவையாக இருக்கும். தேபோல் எனது ஸ்ட்ரைக் ரேட் பற்றி விவாதங்கள் எழலாம். இன்று அது சரியானதாக உணர்கிறேன். வெற்றி பெறுவது நல்லது என தெரிவித்தார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…