புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு
MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் தோனி போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருந்து வருகிறார். தோனிக்கு 42 வயதாகும் நிலையில் கடந்த சீசனில் கோப்பை வாங்கிய பிறகு ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்களின் ஆசைக்காக மீண்டும் ஒரு முறை விளையாட இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி, தற்போது அதிலிருந்து மீண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் தோனி பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்த புதிய சீசனுக்காகவும் புதிய பொறுப்புக்காகவும் என்னால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Read More – Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!
எதனால் இப்படியொரு பதிவை தோனி போட்டுள்ளார் என்று சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. தோனி முதல் போட்டியில் விளையாடி விட்டு பிறகு பயிற்சியாளராக மாற வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாராரோ, தோனியின் பதிவு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஏற்கனவே டி20 உலக கோப்பையின் போது இதுபோன்று தோனி ஒரு விளம்பர யுக்தியை பயன்படுத்தியதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
MS Dhoni’s Facebook post.
– The lion is ready to roar….!!! ???? pic.twitter.com/ZX5aU3z9Ej
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 4, 2024