ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் தல தோனி தனது விக்கெட்டை இழந்தார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட்–டு பிளெசிஸ் களமிறங்கினார்கள். சென்னை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 1.4 ஆம் ஓவரில் ஆவேஸ் கான் வீசிய பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் டு பிளெசிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து 2.1 ஆம் ஓவரில் வோக்ஸ் வீசிய பந்தில் 5 ரன்கள் எடுத்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைதொடர்ந்து ரெய்னா-மொயின் அலி கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி வந்தனர். தவறான ஷாட் காரணமாக மொயின் அலி 36 ரன்களில் வெளியேற, ரெய்னாவுடன் ராயுடு இணைந்தார். இருவரும் நிதானமாக அடிவர, 23 ரன்களில் ராயுடு வெளியேறினார். 54 ரன்கள் எடுத்து சுரேஷ் ரெய்னா வெளியேற, பின்னர் களமிறங்கிய தல தோனி ஒரு ரன் கூட அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார்.
அவரையடுத்து சாம் கரண் களமிறங்கினார். தற்பொழுது சென்னை அணி, 17 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஜடேஜா 13 ரன்களுடனும், சாம் கரண் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…