Dhoni:மீண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே; ஜடேஜா விலகல்
ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரவீந்திர ஜடேஜா முடிவை எடுத்துள்ளார் , மேலும் தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவும், அணியை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை கருத்தில் கொண்டு ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை வழிநடத்த ஒப்புக்கொண்டுள்ளர். தோனி ஐபிஎல் 2022 க்கு முன்னதாக ஜடேஜாவிடம் தலைமையை ஒப்படைத்தார், ஆனால் ஜடேஜாவின் கீழ் எட்டு ஆட்டங்களில் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மீண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே களமிறங்குகிறது.இது குறித்து அறிவிப்பை சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
???? Official announcement!
Read More: ????#WhistlePodu #Yellove ???????? @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022