சச்சின் முதல் அஸ்வின் வரை.. பத்மஸ்ரீ வென்ற கிரிக்கெட் வீரர்கள்..!
கடந்த இருபது ஆண்டுகளில் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசாங்கம் பல கிரிக்கெட் வீரர்களை கௌரவித்துள்ளது.
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது.
1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பத்மஸ்ரீ விருது, இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதாகும். மத்திய அரசாங்கம் பல கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விஜய் ஹசாரே 1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர்.
2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த மரியாதை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் (1999) டயானா எடுல்ஜி (2002) சீனிவாசராகவன் வெங்கடராகவன் (2003) இந்த பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த இருப்பது ஆண்டுகளில் கிரிக்கெட்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலை பார்க்கலாம்.
- ராகுல் டிராவிட் (2004)
- சௌரவ் கங்குலி (2004)
- அனில் கும்ப்ளே (2005)
- எம்.எஸ்.தோனி (2009)
- ஹர்பஜன் சிங் (2009)
- வீரேந்திர சேவாக் (2010)
- விவிஎஸ் லக்ஷ்மண் (2011)
- ஜூலன் கோஸ்வாமி (2012)
- யுவராஜ் சிங் (2014)
- மிதாலி ராஜ் (2015)
- விராட் கோலி (2017)
- கௌதம் கம்பீர் (2019)
- ஜாகீர் கான் (2020)
- குர்சரண் சிங் (2023)
- ரவிச்சந்திரன் அஷ்வின் (2025)