எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.., கே.எல்.ராகுல் ஹேப்பி அண்ணாச்சி!
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டி தம்பதிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருமான கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி 23இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
இது பிரசவ நேரம் என்பதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து தனது மனைவியுடன் மும்பையில் இருந்தார் கே.எல்.ராகுல். இதனால் நேற்றைய டெல்லி கேபிட்டல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இப்படியான சூழலில் தான் அந்த மகிழ்ச்சியான செய்தியை இருவரும் வெளியிட்டனர்.
தங்களுக்கு மார்ச் 24-ல் பெண் குழந்தை பிறந்துள்ளதாக கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி தம்பதி மிக்க மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். பெண் குழந்தை பெற்றெடுத்த தம்பதிக்கு கிரிக்கெட் உலகில் இருந்தும், பாலிவுட் வட்டாரத்தில் இருந்தும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கே.எல்.ராகுல் அடுத்து மார்ச் 30-ல் ஹைதரபாத் (SRH) அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.