கர்நாடகா கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா போட்டிமுடிந்த பிறகு மாரடைப்பால் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஆர்எஸ்ஐ மைதானத்தில் நடைபெற்ற ஏஜிஸ் தென் மண்டல போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன் வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காக சென்றபோது திடீரென்று நெஞ்சு வலிக்க ஆரம்பித்து திடீரென ஹொய்சலா மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.
மைதானத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அவசர சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் ஹொய்சலா அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஹொய்சலாவை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஹொய்சலா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹொய்சலா கர்நாடக பிரீமியர் லீக்கில் ஷிமோகா மற்றும் பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். கர்நாடக ஜூனியர் அணிக்காகவும் விளையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…