CricketBreaking: ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு.!
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூரில் விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் முதன்முறையாக டெஸ்டில் விளையாட தங்களது டெஸ்ட் கேப்-ஐ பெற்றனர்.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(C), கேஎல் ராகுல், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பரத்(W), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (W), பாட் கம்மின்ஸ் (C), நாதன் லியோன், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்