ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி தலைநகர் கேப்டவுன் நகரில் தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.இந்தப் போட்டியில் வென்றால் கடைசி போட்டியை டிரா செய்து தொடரை கைப்பற்றி விடலாம் என இரு அணிகளும் வரிந்து கட்டுவதால்,போட்டி மிக பரபரப்பான கட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வியாழனன்று இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு கேப்டவுனில் நடைபெறுகிறது.
வேகத்தில் மிரட்டும் ரபாடா மிரளும் ஆஸி., வீரர்கள்:
தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது தோள்பட்டையை இளம் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இடித்தார்.பின்னர் தொடக்க ஆட்டகாரர் வார்னரை வீழ்த்தியதும் அவரது முகத்திற்கு நேராக சென்று ஆக்ரோஷமாக கத்தினார். இந்நிலையில் ரபாடாவின் இந்த செயலுக்கு துரித நடவடிக்கை எடுத்த ஐசிசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. பின்பு ஐசிசி விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்த ரபாடா 6 மணி நேரம் வாதாடி 3-வது டெஸ்டில் களமிறங்க அனுமதி பெற்றார்.ரபாடாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எளிதில் சமாளித்து தொடரில் முன்னிலை பெறலாம் என ஆஸ்திரேலிய அணி பகல் கனவு கண்டது.ஆனால் தற்போது ரபாடா வருகையால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பீதியில் உள்ளனர்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…