கிரிக்கெட் சூதாட்டம் : இந்தியர்கள் 5 பேர் இலங்கையில் கைது….!!
இந்தியா – இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து இந்தியர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா – இலங்கை மகளிர் அணிகளிடையேயான 3- வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் அடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்று நடந்த 3-வைத்து போட்டியின் போது கட்டுநாயகே மைதானத்தில் 5 இந்தியர்கள் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை இலங்கை கிரிக்கெட் அணியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.