ஜம்மு -காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கண்ணி வெடிகுண்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தான் ஆயுத கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்து உள்ளது.
இதனால் அமர்நாத் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது.தரிசனம் செய்து முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காஷ்மீரில் பதட்டம் நிலவும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் 100 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர் பயிற்சி பெற்று வருகின்றனர்.அவர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பாதுகாப்பு துறை கூறியுள்ளது.
காஷ்மீரில் வருகின்ற 17-ம் தேதி துலதீப் கோப்பை போட்டி நடைபெற இருந்தது.இந்த கோப்பையை தொடந்து விஜய் ஹசாரே கோப்பையும் , டிசம்பர் 9-ம் தேதி ராஞ்சி கோப்பை போட்டிகள் நடத்த இருந்தனர்.இதற்காக 8 அணிகளை சார்ந்த 100 வீரர்கள் ஷெர்-இ – காஷ்மீர் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.
அந்த வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இருந்தார்.காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த வீரர்களை தவிர மற்ற வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…