சர்வதேச கிரிக்கெட் வீரர் மரணம்: ரசிகர்களை கவலை
கடந்த 1981ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் கொன் டி லாங். ஸ்காட்லாந்து அணிக்காக 2015ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். மேலும் ஸ்காட்லாந்து உள்ளூர் போட்டிகளில் 144 முதல்தர போட்டிகளிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்நிலையில் மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்த 38 வயதான கொன் டி லாங் திடீர் மரணம் அடைந்துள்ளார் இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.