ஆசிய விளையாட்டு 2022ல் கிரிக்கெட் சேர்ப்பு!! ஒலிம்பிக்கிற்கான முதல் முன்னெடுப்பு!!
- உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி போன்று ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்கும் விளையாட்டு தொடர் ஏசியன் கேம்ஸ்.
- இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
2022 ஆம் ஆண்டு இந்த போட்டிகள் சீனாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியாக பல ஆண்டுகாலமாக சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டு திருவிழாக்களில் கிரிக்கெட் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டே வந்தது. இந்நிலையில் அதன் முதல் முன்னெடுப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தாண்டி வரும் காலங்களில் ஒலிம்பிக் தொடரிலும் குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடர் சேர்க்கப் படலாம் என நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது.