Cricket BREAKING: ராகுலின் அரைசதத்தால், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.!

Default Image

இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 216 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் (17 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில் (21 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து இறங்கிய விராட் கோலி, 4 ரன்களுக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியில் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி, தேவையான பந்துகளில் மட்டும் ரன் அடித்து வந்தார்.

அரைசதம் அடித்த ராகுல்(64* ரன்கள்) மற்றும்  ஹர்டிக் பாண்டியா( 36 ரன்கள்) உதவியுடன் இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 வென்றுள்ளது. இலங்கை அணி சார்பில், லாஹிரு குமாரா மற்றும் கருணாரத்னே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்