அணியில் சேர்க்காததால் தேர்வுக்குழு தலைவருக்கு சரமாரி அடி!!
அமீர் பண்டாரி டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் சீனியர் வீரர்களின் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் ஆவார். இவர் இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள சையத் முஸ்டாக் அலி கோப்பை தொடருக்காக டெல்லி அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த பயிற்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவரை சரமாரியாக தாக்கி அவரை நிலைகுழைய செய்து கீழே தள்ளியது. பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியது.
இதனையடுத்து போலீசார் விசாரணையில், 23 வயதுக்குட்பட்டோர் அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது. அணியில் சேர்க்குமாறு அமித் பண்டாரியை, வீரர் அனுஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவருக்கு போதிய தகுதி இல்லை என பண்டாரி கூறியதால், ஆத்திரமடைந்து, குண்டர்களை தூண்டி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.