டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகல் என தகவல்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு முதுகில் (back stress fracture injury) ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 20 ஓவர் போட்டி தொடரில் கடைசி இரு போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இதனைத்தொடர்ந்து, நேற்று தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் பும்ரா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நேற்றைய போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், பும்ராவுக்கு ஏற்கனவே முதுகில் ஏற்பட்ட காயமானது தற்போது முழுமையாக குணமடையவில்லை என்றும் இதனால் அவருக்கும் ஓய்வு மற்றும் சிகிச்சை தேவைப்படுவதால், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பும்ராவுக்கு 4 முதல் 6 மாதங்கள் ஓய்வளிக்க பிசிசிஐ சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…