#CricBreaking: உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய பும்ரா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Default Image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகல் என தகவல்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு முதுகில் (back stress fracture injury) ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 20 ஓவர் போட்டி தொடரில் கடைசி இரு போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.  இதனைத்தொடர்ந்து, நேற்று தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் பும்ரா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நேற்றைய போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், பும்ராவுக்கு ஏற்கனவே முதுகில் ஏற்பட்ட காயமானது தற்போது முழுமையாக குணமடையவில்லை என்றும் இதனால் அவருக்கும் ஓய்வு மற்றும் சிகிச்சை தேவைப்படுவதால், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பும்ராவுக்கு 4 முதல் 6 மாதங்கள் ஓய்வளிக்க பிசிசிஐ சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்