ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஆகஸ்ட் 18 முதல் நேரடி ஒளிபரப்பாகும் CPL டி20 கிரிக்கெட் போட்டிகள்.!

Default Image

வெஸ்ட் இண்டீஸில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தொடங்கும் கரிபிரியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.

இந்தியாவில் பிரதான மாநிலங்களை தலைமையாக கொண்டு நடைபெரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் போல, வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளின் பெயரே கரிபிரியன் பிரிமியர் லீக்.

இந்த போட்டிகள், இம்மாதம் (ஆகஸ்ட்) 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதனை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்போட்டிகளின் டிஜிட்டல் உரிமையை ஃபேன்கோடு (FanCode) நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் நேரடி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமை இரண்டையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்து குறிப்பிடதக்கது.

வரும் 18ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 போட்டிகள் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் (Trinidad and Tobago) நடைபெறுகிறது. மொத்தம் 33 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

 பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் (The Brian Lara Cricket Academy in Tarouba) அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் உட்பட 23 போட்டிகளும், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் (Queen’s Park Oval in Port of Spain) 10 போட்டிகளும் நடைபெற உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்