தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி..!
எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியின் தாய் தேவகி தேவி மற்றும் தந்தை பான் சிங் ஆகியோர் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் பல்ஸ் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே இன்று கொல்கத்தா அணியுடன் விளையாட உள்ளது. மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வென்ற சிஎஸ்கே மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 2,023 உயிரிழந்துள்ளனர். 1,67,457 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,16,130 ஆகவும், மொத்தமாக குணடைந்தோர் எண்ணிக்கை 1,32,76,039 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 1,82,553 ஆகவும், மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 21,57,538 ஆகவும் உள்ளன.