ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் தேவ்தத் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியானது.
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக தேவ்தத் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. கடந்த சீசனில் அறிமுகமான படிக்கல், 473 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது யார் என்ற எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…