கொரோனா அச்சம்.. தனிமைப்படுத்தப்பட்ட நியூஸிலாந்து அணி வீரர்!

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது. இதில் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணி வீரரான லுக்கி பெர்குசனுக்கு தொண்டை வலி எடுத்தது. இதனையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை நடத்தப்படுகிறது.
மேலும், போட்டி தொடங்கும்முன் ஆஸ்திரேலியா வீரரான கேன் ரிச்சர்ட்சன் தொண்டை வலி இருப்பதாக கூறினார். இதனையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது. பின் கொரோனா தொற்று இல்லை என கண்டறிந்த பின், அவரை விளையாட அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025