மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்த கான்வே …ஆனா இதை எதிர்ப்பார்கல ..!
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவான் கான்வே, பாகிஸ்தான் உடனான தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் மே மாதத்தின் தொடக்கத்தில் சென்னை அணிக்கு இணைவார் என்று முதலில் தகவல்கள் வந்தது. அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சென்னை அணியிலிருந்து, அதாவது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலும் விலகி உள்ளதாக அதிக்ராப்பபூர்வ அறிவிப்பும் வெளியானது.
இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர். அதற்கு காரணம் சென்னை அணியில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய எந்த ஒரு போட்டியிலும் பேட்டிங்கின் தொடக்கம் சரிவர அமையவில்லை என்பது தான். இந்நிலையில் அவர் மீண்டும் அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட போது இப்படி ஒரு செய்தி சிஎஸ்கே ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி இருக்கையில் நேற்றைய நாளில் மீண்டும் அவர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியானது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே டி20 உலகக்கோப்பை தொடங்க இருப்பதால் அவரது காயத்தை சரி செய்து வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சியளித்து அவரை முழுமையாக தயார் செய்ய போவதாக சென்னை அணி முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சென்னை அணியின் X தளத்தில் அவர் மைதானத்தில் அமர்ந்து பயிற்சியில் ஈடுபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை இனைத்து ‘தேவ் அட் அன்புடென்’ என்று பதிவிட்டு இருந்தனர். இதனை எந்த ஒரு சிஎஸ்கே ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. மேலும், அவர் விரைவில் முழுமையாக தேர்ச்சி பெற்றால் வரவிற்கும் ஏதேனும் ஒரு சில சிஎஸ்கே போட்டிகளில் விளையாடவைக்கலாம் என்றும் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Dev at Anbuden! ????#WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/g0m736mRFi
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2024