RCB அணிக்கு தோல்விக்கு காரணம் முரண்பாடுகள்….ரே ஜென்னிங்ஸ்.!

Default Image

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றது கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் விராட் கோலி வருட வருடம் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு நிற தொப்பியை சொந்தமாகவே வைத்துக் கொள்வார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதற்கு உதாரணமாக கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் மற்றும் மொத்தம் 973 ரன்கள் விளாசினார். ஆனால் அவரது அணி மட்டும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை அது அவருக்கு வருத்தம் அளிக்கிறது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது, ஆரம்ப காலகட்டங்களில் விராட் கோலி கேப்டன்ஷியில் இருந்த தடுமாற்றங்களும் அவருக்கு இருந்த முரண்பாடுகளும் தோல்விக்கு மிக முக்கியமான காரணம்.

மேலும் அணியில் 30 வீரர்களையும் கவனிக்கவேண்டியது தான் ஒரு பொறுப்பாக அவர் கருதிக் கொள்ள வேண்டும் ஆனால் அதன் பிறகு அதிலிருந்து விலகி தனியாக நிற்கின்றார். நீங்களும் ஒரு கேப்டனாக அவர் தவறான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது என்னால் ஒன்றும் கூற முடியாது, முரண்பாடுகள் மட்டுமே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்