சர்ச்சைக்குள்ளான விராட் அவுட் – நடுவர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்..!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.
28-வது ஓவரை அஜாஸ் படேல் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ராஸ் டெய்லரிடம் சுப்மான் கில் கேட்சை கொடுத்தார். அவர் 71 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் அஜாஸ் படேல் 30வது ஓவரில் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கட்டை பறித்தார்.
30வது ஓவரில் 2-வது பந்தில் புஜாரா 5 பந்துகள் விளையாடி ரன் எடுக்காமலும், இந்த ஓவரின் கடைசி பந்தில் விராட்டும் ரன் எடுக்காமலு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் கோலி எல்.பி.டபிள்யூ அவுட் நடுவரின் முடிவால் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜாஸ் படேல் வீசிய பந்து முதலில் கோலி பேட்டில் அடித்த பின்னர் காலில் அடித்தது. பீல்ட் அம்பயர் அவுட் கொடுத்தவுடன், மூன்றாவது நடுவரும் அவுட் கொடுக்க பீல்ட் அம்பயர் அனில் சவுத்ரியிடம் கோலி சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் கோலி கனத்த மனதுடன் பெவிலியன் சென்றார்.
பீல்ட் அம்பயர் மற்றும் மூன்றாவது நடுவர் இருவரும் தவறாக அவுட் கொடுத்ததாக ரசிகர்கள் நடுவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணி 52 ஓவரில் 165 ரன் எடுத்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. அஜாஸ் படேல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Virat Kohli given LBW which seem to be not out. Virender Sharma the third umpire.#IndvsNZtest#ViratKohli #Pujara #umpire pic.twitter.com/XBRGCNhIQJ
— ????????Sheryas Ihear (@scottlewis_27) December 3, 2021