கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள்; வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம்.!
இந்திய அணியில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல்.ராகுலின் தேர்வு குறித்து வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார்.
இந்திய அணியில் கே.எல்.ராகுலை சேர்த்ததை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். கே.எல்.ராகுல் தொடர்ந்து மோசமான பார்மால் ரன்கள் குவிக்க திணறிவருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டிலும் கூட ராகுலால் பெரிதாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. முதல் டெஸ்டில் 20 ரன்கள், இரண்டாவது டெஸ்டில் 17 & 1 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.
தொடர்ந்து மோசமாக விளையாடினாலும் ராகுலுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதைக் கண்டித்து கருத்து தெரிவித்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், கே.எல்.ராகுலின் மோசமான பார்ம் தொடர்கிறது, இந்திய அணியில் கடந்த 20 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான சராசரியுடன் எந்தவொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் விளையாடியதில்லை. இந்திய அணியில் அவரது தேர்வு, நீதியின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.
And the torrid run continues. More to do with rigidity of the management to persist with a player who just hasn’t looked the part. No top order batsman in atleast last 20 years of Indian cricket has played these many tests with such a low average. His inclusion is …. https://t.co/WLe720nYNJ
— Venkatesh Prasad (@venkateshprasad) February 18, 2023