விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த- ஹர்பஜன்.!
நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில், திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் விராட் கோலி தற்பொழுது மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆம் விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கப் போவதாக ட்விட்டரில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். மேலும் விராட் கோலி வெளியிட்ட பதிவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் மூன்று பேராக வருகிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்நிலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அனைத்து கிரிக்கெட் வீரர்கள், மற்றும் பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், அதில் அவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உங்கள் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார் .
Congratulations to you both @AnushkaSharma @imVkohli ????❤️❤️???????? https://t.co/lcISr5HSmg
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 27, 2020