பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையை கொஞ்சிய இந்திய மகளிர்படை.., குவியும் பாராட்டுகள்..!

Default Image

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய செய்தது. 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 67 ரன்கள் எடுத்தார். சினே ராணா ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும், தீப்தி சர்மா 40 ரன்களும் எடுத்தனர். இந்த நான்கு பேரைத் தவிர எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்கத்தை எடுக்கவில்லை. பின்னர்

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய மகளிர் அணி வரும் 10 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத குழந்தையை சந்திக்க சென்றனர். அங்கு  அக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர். குழந்தையை பார்க்க இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், ஜூலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

 இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு ஆடவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானைக் கட்டிப்பிடித்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய வீரர்கள் ஆட்டத்தில் தோற்றாலும் இந்த உணர்வுக்காக பாராட்டப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்