வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் … பயங்கரமான சாதனை- சச்சின்.!
ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக் கொண்டு வருகிறது, இதில் 3 தொடர் முடிவு பெற்ற நிலையில் இரண்டு தொடர்கள் இங்கலாந் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .
இந்த நிலையில் இந்த 3 வது தொடரில் ஸ்டூவர்ட் பிராட் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் 7 வது நபராக சாதனை படைத்தார், இந்நிலையில் இவர்க்கு பல பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது பயங்கரமான சாதனை என்றும் அவர் அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோல முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் பிராட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations to England on their emphatic series win.
And like I said earlier, @StuartBroad8 had a spring in his step and was out there on a mission. Congratulations also to him on picking his 500th Test wicket. Terrific achievement! #ENGvWI pic.twitter.com/LGRKWBYOSh
— Sachin Tendulkar (@sachin_rt) July 28, 2020