போட்டியை மாத்திய ஓவர்.. திடீரென கோலிக்கும் – பட்டலருக்கும் இடையே மோதல்! என்ன நடந்தது?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பட்லர் தனது விக்கெட்டை இழந்தபோது பட்டலருக்கும் – கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் – பட்லருக்கும் இடையே திடீரென வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இந்த போட்டியின் 12 ஆம் ஓவரை வீச புவனேஷ்வர் குமார் வந்தார். அப்பொழுது அவர் வீசிய பந்தை பட்லர் லாங் ஆஃப் திசையில் துக்கி அடிக்க, பந்து ஹர்த்திக் பாண்டியா கைக்கு சென்றது. அப்பொழுது கோலி, உற்சாகத்தில் ஏதோ செய்ய, அது பட்லருக்கும் – கோலிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அப்பொழுது கோலி பேசிக்கொண்டே பட்லரை நோக்கி செல்ல, மைதானத்தில் பதற்றம் நிலவியது. அங்கு அம்பையராக இருந்த நிதின் மேனன், அவர்களுக்கு அருகில் சென்று, இருவரையும் பேசி சமாளித்து, பிரச்னை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார். இதுதொடர்பான விடியோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
— The Laughter Theory (@laughtertheory_) March 20, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025