கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம்.!

Default Image

கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த கேப்டன் தோனியின் வெற்றிகளுக்கான பலன் கங்குலிக்கு தான் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் கங்குலியைவிட சிறந்த கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.

தோனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு முக்கிய காரணம் கங்குலியை உருவாக்கிய பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தான்,தோனி சிறந்த கேப்டனாக இருப்பதற்கு ஜாகிர் கான் கிடைத்தது தோனிக்கு அதிஷ்டம் தான் உலகத்தில் தரமான பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தான் என்றும் கூறினார்.

இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார், அதில் அவர் பேசியது தோனி மிகவும் சிறந்த வீரர், இக்கட்டான சூழ்நிலையில் அணியை மீட்பவர், மேலும் தோனி கேப்டன் பதவியை ஏற்கும் போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் சேவாக் போன்ற வீரர்கள் அதிகம் இருந்தனர், அவர்கள் எல்லாம் இருந்த போதிலும் தோனி மிகச்சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தினார்.

இந்நிலையில் தோனி கேப்டனாக இருக்கும் பொழுதுதான் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்தார். மேலும் தோனி ஓய்வு பெறும் நேரத்தில் தான் பும்ரா இந்திய அணிக்கு அறிமுகமானார். மேலும் என்னை பொறுத்தவரையில் கங்குலி – தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம் இருவருமே இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை மிட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்