ஹல்டிராம், இன்ஃபோசிஸ், அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்க போட்டி! தகவல்.!
ஹல்டிராம், இன்ஃபோசிஸ், அதானி உள்ளிட்ட 30 நிறுவனங்கள் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் பிரபலமாக நடைபெற்றுவரும் நிலையில், அதன் அடுத்தகட்டமாக மகளிர் ஐபிஎல் தொடர் முதன்முறையாக இந்த ஆண்டு மார்ச்-7இல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து மகளிர் ஐபிஎல் அணிகளை ஏலத்தில் வாங்க தற்போதுள்ள 10 ஐபிஎல் அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலும் மகளிர் ஐபிஎல் போட்டிக்கான உரிமைகளை வாங்க 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஹல்டிராம், இன்ஃபோசிஸ், ஸ்ரீராம் குழுமம், ஜேகே சிமென்ட் மற்றும் அதானி குழுமம் ஆகியவை பிசிசிஐயின் டெண்டர் அழைப்பை ஏற்று அணிகளை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.