போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் சதத்தால் 20 ஓவர்களில் முடிவில் 231 ரன்களை குவித்தது.
அதன்பிறகு 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக நபி 4 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.