#TNPL BREAKING: திண்டுக்கல்லை பந்தாடிய கோவை..! பைனலுக்குள் மாஸான என்ட்ரி..!
டிஎன்பிஎல்-ன் முதல் தகுதிச்சுற்று LKK vs DGD போட்டியில், கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று முதல் தகுதிசுற்றுப் போட்டி நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சச்சின் 70 ரன்களும், முகிலேஷ் 44 ரன்களும், சுரேஷ் குமார் 26 ரன்களும் குவித்தனர். திண்டுக்கல் அணியில் சுபோத் பதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திண்டுக்கல் அணியில் முதலில் களமிறங்கிய விமல் குமார் 1 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து களமிறங்கிய சிவம் சிங் 10 ரன்களில் வெளியேறினார். இதன்பின் களமிறங்கிய பூபதி குமார் பொறுப்பாக விளையாடினர்.
அவரையடுத்து, பாபா இந்திரஜித் நிதானமாக விளையாட, பூபதி குமார் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கிஷோர் மற்றும் ஆதித்யா கணேஷ் சொற்ப ரன்களில் வெளியேற, பாபா இந்திரஜித்தும் தாமரைக்கண்ணன் வீசிய பந்தில் 21 ரன்களுடன் வெளியேறினார்.
பிறகு சுபோத் பதி, சரத் குமார் இணைந்து அணிக்கு ரன்கள் சேர்க்க, சுபோத் பதி ஆட்டமிழந்தார். சரத் குமார் சிக்ஸர்களை விளாசி 18 ரன்களில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவரும் ஆட்டமிழந்தார். முடிவில், திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அதிகபட்சமாக சரத் குமார் 62 ரன்களும், பூபதி குமார் 25 ரன்களும், பாபா இந்திரஜித் 21 ரன்களும் குவித்துள்ளனர். இதில் கோவை அணியில் முகமது 3 விக்கெட்டுகளையும், தாமரை கண்ணன் மற்றும் வள்ளியப்பன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த பரபரப்பான தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.