காயமடைந்த விராட் கோலி எப்படி இருக்கிறார்? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விரலில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, விராட் கோலி நலமாக இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்களை எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 17.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 73 , சாய் சுதர்சன் 49 ரன்களையும் எடுத்தனர். விராட் கோலி, பில் சால்ட், படிக்கல், ரஜத் படிதார் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது.
இதில், ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் விராட் கோலி. இது ஒரு பக்கம் இருக்க, நேற்றைய தினம் போட்டியின்போது கையில் காயமடைந்த ஆர்சிபி வீரர் விராட் கோலி தற்போது நலமுடன் உள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபாளார் தகவல் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, குருணால் பாண்டியாவின் 12வது ஓவரின் ஐந்தாவது பந்தை சாய் சுதர்சன் வேகமாக அடிக்க, கோலி கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை, சாய் சுதர்சன் அடித்த பந்து மிக வேகமாக வந்ததால், அவரது கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, வலியால் துடித்த விராட் கோலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் பீல்டிங் செய்யத் தொடங்கினார். இப்பொது, விராட் கோலியால் அடுத்த போட்டியில் அவரால் விளையாட முடியுமா இல்லையா என்பதுதான். ஆனால், நேற்றைய போட்டிக்குப் பிறகு, அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபாளார், கோலி முற்றிலும் நலமாக இருப்பதாகக் கூறியதோடு, அவர் அடுத்த போட்டிக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.